வேலூர், அக். 16-
வேலூர் மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஓபிசி மக்கள் உரிமைக் கட்சியினர் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓபிசி மக்கள் உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும், தேர்வாணையக் குழு உறுப்பினருமான வெ. ரத்தின சபாபதியின் வழிகாட்டுதலின்படி, ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை முறையாக நடத்த வலியுறுத்தி, இந்திய குடியரசுத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டத் தலைவர் மனோகரன், மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் நாயுடு, சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சடகோபன், போயர் சங்க மாநிலத் தலைவர் வெங்கடேசன், SFRBC பொருளாளர் பார்த்திபன், துணைச் செயலாளர் சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் சாரங்கபாணி, மகளிர் அணியைச் சேர்ந்த பாரதி, ஜெய்சங்கர், வெங்கடேசன், தங்கமுத்து மற்றும் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.சி. லோகு யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.











Leave a Reply