அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரியலூர் இரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் எளிதாகவும், பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் சென்றடையும் வகையில் சீரான பேருந்து சேவையை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றையதினம் அரசுப் பேருந்தில் நேரடியாக பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இரயில்வே நிலையம் செல்லும் சாலைகளில் சில இடங்களில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்புகளாலும் பேருந்துகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இயக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பேருந்துகள் எவ்வித இடையூறும் இன்றி சீராக இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சாலைகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள மூடிய கழிவுநீர் கால்வாய்களில் சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.










Leave a Reply