காட்பாடியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கல்!வேலூர், ஜூலை 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ், சிறப்பு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் லக்ஷ்மி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.