பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் மின் மோட்டார் திருட்டு: ஆய்வாளர் பிரபு நடவடிக்கை எடுப்பாரா?வேலூர்,ஜூன் 9-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில விஷமிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டாரை திருடிச் சென்றுள்ளனர். இதுவரை இது போன்ற திருட்டு சம்பவங்கள் இந்த பள்ளியில் நடந்ததேயில்லை. இளைஞர்களை ஊக்குவிக்கவே இப்பள்ளியில் விளையாட்டுக்காக அவ்வப்போது திறந்து வைக்கப்படும். இதை தவறாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சில விஷமிகள் இப்பள்ளியில் குடிநீர் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டாரை திருடிச் சென்றுள்ளனர். இதனால் பள்ளி திறந்து இயங்கும் வேளையில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவியாய் தவித்து வருகின்றனர். எனவே இது குறித்து பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மின்மோட்டாரை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதிய லைன், எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் நகர்., ஜெ. ஜெ நகர், எம்.ஜி.ஆர். நகர், பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்புசாமி பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல் மனுவை கிடப்பில் போட்டுவிட்டு காவல் துறையில் உள்ள ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் வரை அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் மின் மோட்டாரை போர்க்கால அடிப்படையில் மீட்டு பள்ளியில் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.