
துரோகிகளும் எதிரிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர் :புரட்சித்தாய் சின்னம்மா வி. கே. சசிகலா !சென்னை, மே 5-2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மா வி. கே. சசிகலா அவர்கள் வெளியிட்ட அறிக்கை :நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு முதலில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எனது பிரதான கோரிக்கையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், எதிரிகளும், துரோகிகளும் வீழ்த்தப்பட்டுள்ளார்கள். திமுக மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் த/விஜய்க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். எனது எஞ்சியிருக்கும் காலம் முழுவதும் தமிழக மக்களுக்காகவே உழைப்பேன் என்றும், தமிழக மக்களுக்கு என்றென்றும் துணை நிற்பேன் என்றும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.










Leave a Reply