முத்திரைத்தாள்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார், பத்திர விற்பனையாளர் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு!!!!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட 5/15 வெங்கட்ராம ஐயர் லேஅவுட் பகுதியில் வசிக்கும் குமாரசாமியின் மகன் கார்த்திகேயன் என்பவர் சூலுரில் E.N. ராஜா என்பவர் பத்திரப்பதிவு முத்திரைத்தாள் விற்பனை செய்து வருகிறார் இவர் அரசு நிர்ணயித்த விலையை விட அதாவது 100 ரூபாய் முத்திரைத்தாள் 120 ரூபாய்க்கும் 500 ரூபாய் முத்திரைத்தாள் 550 ரூபாய்க்கும் அதிக வேலைக்கு விற்று வருவதாகவும் 10 ரூபாய் நீதிமன்ற வில்லைகளை ரூபாய் 15க்கு விற்று வருகிறார் இவர் சட்டத்திற்கு விரோதமான விற்பனை செய்து வருவதை குறித்த அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் அதன் நகல் கோவை மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வைக்கு அனுப்பி உள்ளதாகவும் மேலும் ராஜாவின் பத்திர விற்பனை அனுமதியை ரத்து செய்து சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.. உடனடி நடவடிக்கையாக கார்த்திகேயன் கொடுத்த மனுவிற்கு 17.03.2026 அன்று தெற்கு மாவட்ட பதிவாளர் பார்வைக்கு கடிதம் பெறப்பட்டு மேற்படி புகார் தொடர்பாக E.N. ராஜாவிற்கு 29.04.2026 மாலை நான்கு மணிக்குள் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட பதிவாளர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….