காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை விரட்டியடிப்பு!

வேலூர், ஏப். 10-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது வண்டறந்தாங்கல். இந்த பகுதியில் விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இந்த நெல் பயிர் நிலத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்து இரவு முழுவதும் அட்டகாசம் செய்து பயிர்களை நாசம் செய்தது. இதை பார்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் வானவெடிகளை வெடித்தும் அந்த யானையை விரட்டியடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இதே பகுதியில் சுற்றித் திரிந்தது. நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெல் பயிர்களை நாசம் செய்தது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறை உதவியுடன் விடாது விரட்டி அந்த யானையை விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வண்டறந்தாங்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் யானை நடமாட்டத்தால் மிகவும் பீதி அடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொதுமக்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு குடும்பத்துடன் வீதிகளில் அமர்ந்துள்ளதும் மிகவும் பரிதாபத்துக்குரியது, வேதனைக்குரியது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வனத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் உள்ளது.