Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டு தற்போது உலகெங்கும் வியந்து பார்க்கும் ஒரு நகரமாக கோவை விளங்குகிறது இதில் பந்தய சாலை முக்கிய அங்கம் வகிக்கிறது இப்பகுதியில் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் அதே வேலையில் அங்கே இளைப்பாற பல்வேறு சாதனகளும் இருக்கிறது இந்த இடத்தில் மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் எல்லாம் நோ பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை அத்துமீறி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள் இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த மன உளைச்சல்கள் ஏற்படுத்துகின்றனர் இதை கண்டிக்கும் வகையில் காவல்துறையினர் அங்கே வந்து அத்துமீறி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து இடையூறு செய்யும் இது போன்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மூலம் நல்ல பாடத்தினை கற்றுத் தருகிறார்கள் இதை அங்கே வரும் மக்கள் காவல்துறையினரை பாராட்டி உள்ளனர்..
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர், ஏப். 29-சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பு: வரும் 30ம் தேதி இரவு 9 மணி முதல் மே 1ம் தேதி இரவு 11.07 மணி வரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.கிளாம்பாக்கத்தில் இருந்து 30ம் தேதி 548 பேருந்துகளும், மே 1ம் தேதி 565 பேருந்துகளும் இயக்கம்.மாதவரத்தில் இருந்து 30ம் தேதி 186, மே 1ம் தேதி 174 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.அதேபோன்றே வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வி.கோட்டா (வேங்கடகிரி கோட்டா) ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி கொலை – மற்றொரு நிருபருக்குப் பலத்த காயம்!வேலூர், ஏப். 29-ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வி.கோட்டாவில் இன்று காலை அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரஜோதி நாளிதழின் நிருபர் ஜெகன்மோகன் ரெட்டி மர்ம நபர்களால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.சித்தூர் மாவட்டம், வி. கோட்டா ஆந்திர ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன் மோகன் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து கத்திகளால் சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.அவருடன் இருந்த பிரஜாசக்தி பத்திரிகை நிருபரும் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவருக்கும் அருவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். ஜெகன்மோகன் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலைக்கான காரணம் குறித்துப் ஆந்திர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் (ம) ஊடகவியலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து (என்கவுண்டர்) கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் ஆந்திர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.இச்சம்பவத்தை கண்டித்து சித்தூரில் உள்ள பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அதே போன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லத்தேரி அரசு ஆண்கள் பள்ளியில் பணிநிறைவு பெற்ற தலமையாசிரியர் கு.கார்த்திகேயனுக்கு பாராட்டு விழா!
வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த பகிரங்க வெடிகுண்டு மிரட்டல்: ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை!வேலூர்,ஏப்.29-வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் தங்கும் இல்லம் ஆகிய இரண்டு இடங்களில் ஆர் .டி. எக்ஸ்., பாம் வைத்துள்ளதாகவும் அது இன்று (ஏப்ரல் 28) வெடிக்கும் என மாவட்ட ஆட்சியரின் இ-மெயிலுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் ஆட்சியர் அறை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறை மற்றும் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அதேபோன்று ஆட்சியர் தங்கும் இல்ல பகுதிகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. ஆனால் எங்கும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பிய மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் நடந்த சாலை விபத்தில் பெண் பரிதாப பலி!வேலூர், ஏப். 28-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கனரக வாகனம் மின் கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் உயர் மின் அழுத்த கம்பம் சாய்ந்து தரையில் விழுந்தது. இதனால் அருகில் இருந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழக ஆந்திர இரு மாநில இணைப்பு போக்குவரத்து இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மின்துறை களப் பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை சரி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண் 45: கே. வி. குப்பம் மற்றும் எண் 46: குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்பாடியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!வேலூர்,ஏப்.28-பெங்களூரைச் சேர்ந்தவர் மதுவாணன் (50) .இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்னை ரயிலில் பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு பெண் பயணியிடம் மதிவாணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காட்பாடி ரயில்வே போலீஸார் காவல் ஆய்வாளர் மனோன்மணி தலைமையில் விரைந்து சென்று ஓடும் ரயிலில் மதிவாணனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர் .வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவின் பேரில் மதிவாணன் வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆதலால் முன்பதிவு செய்துள்ள ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரோ அல்லது ரயில்வே போலீஸாரோ பாதுகாப்பு பணிக்கு நியமிக்க வேண்டுமென பெண் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் நகர மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கைத்தறி காவலன் எஸ். ரமேஷ்!வேலூர், ஏப். 28-பிறந்தநாள் காணும் முன்னாள் அரசு வழக்கறிஞர், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர், குடியாத்தம் நகர மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதியை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தனக்கு வாழ்த்த வயதில்லை என்று வணங்கி மகிழ்ந்தார் குடியாத்தம் நகர கைத்தறி காவலன் மற்றும் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நகர செயலாளர், இளம் தொழிலதிபர் எஸ்.இரமேஷ். பிறந்த நாள் கொண்டாடி மகிழும் வழக்கறிஞர் கே. எம். பூபதி கைத்தறி காவலன் எஸ். இ ரமேஷை வாழ்த்தி, பாராட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் நண்பகல் அறுசுவை விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
முத்திரைத்தாள்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார், பத்திர விற்பனையாளர் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு!!!!
1
…
7
8
9
…
91