அரியலூரில் அரசு மதுபானக் கடைக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோட்டியால் பாண்டிபஜார் கிராமத்தில் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உடையார்பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்திய மக்கள், கடையைத் தொடர்ந்து நடத்த அவகாசம் கேட்டதால் அதிருப்தியடைந்து பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினர். கடையைத் திறந்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.