NEWS TODAY | வெற்றிப் பயண பேருந்தில் ஏறியவர்களுக்கு கடைசியில் கிடைத்தது நடராஜா சர்வீஸ்
அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம் அருகே பாதியில் இறக்கிவிடப்பட்ட வெற்றிப் பயணப் பேருந்து பயணிகள் – கடும் அவதி!
கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த தமிழக அரசின் வெற்றிப் பயணப் பேருந்து, தா.பழூர் அருகே டயர் பஞ்சர் எனக் கூறி பயணிகளைப் பாதியிலேயே இறக்கிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.










Leave a Reply