ஊசூரில் தமிழ்நாடு வெற்றி திட்டத்தின் கீழ் பங்கேற்பு மதிப்பீட்டுப் பணி : ஆட்சியர் பங்கேற்பு!

வேலூர், அக்.11-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊசூர் கிராமத்தில், தமிழ்நாடு வெற்றி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் : தேவைகள் மற்றும் கிராம வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணும் நோக்கில் பங்கேற்பு மதிப்பீட்டுப் பணி மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இப்பணியில், கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வளர்ச்சிக்கான திட்டம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி இயக்குநர் (பயிற்சி, ஊரக வளர்ச்சித் துறை) காவ்யா, வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். விஜயகுமாரி கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.