வேலூரில் வேலைவாய்ப்பு முகாம்: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

வேலூர், அக்.11-
வேலூர் இன்பான்ட்ரி சாலை, பேபி திருமண மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. வேலூரில் தலைமுறை பேரவை மற்றும் எக்விடாஸ் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல் துறை டி.ஜி.பி. எம்.ரவி, வேலூர் தொகுதி எம் எல் ஏ வினோத்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.