வேலூரில் ஆன்மிக நண்பர்கள் குழு சார்பில் 3ஆம் ஆண்டு மாபெரும் அன்னதான விழா!

வேலூர், அக்.11-
வேலூர் மாவட்டம், வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி முன்பாக, புரட்டாசி மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, வேலூர் ஆன்மிக நண்பர்கள் குழு சார்பில் 3ஆம் ஆண்டு மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக விஐடி துணைவேந்தர் ஜி.வி. செல்வம், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, டாக்டர் ஐயப்பன், பகுதி செயலாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் ஆன்மிக நண்பர்கள் குழு உறுப்பினர்கள் எழிலரசன், சுரேந்தர், நீல. நாராயணன், பூபதி, ரமேஷ், சுரேஷ், தீபக், சீனிவாசன், கணேஷ், ராஜா, சங்கர், முருகானந்தம், சத்யா, செல்வகுமார், தினேஷ், கார்த்திக், சதீஷ், சி.டி .சீனி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். தொடர்ந்து 3வது ஆண்டாக நடைபெற்ற இந்த மாபெரும் அன்னதான விழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.