அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ச்சியாக, சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களை பறக்கவிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், கலந்துகொண்டார்.
மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய 45 காவலர்களுக்கும் மற்றம் அரசின் பல்வேறுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 240 அரசு அலுவலர்களுக்கும் என மொத்தம் 285 நபர்களுக்கு சிறந்த பணியாளருக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி, பாராட்டினார்;.
பின்னர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் சார்பில் தேசப்பற்று நடன நிகழ்ச்சிகளும் என 06 பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசும், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றதை தொடர்ந்து, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் த
ந.மிருணாளினி, அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தோட்டக்கலைத் துறையின் சார்பில் மலர் மற்றும் பழங்களால் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர தின விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.










Leave a Reply