
காட்பாடியில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி பாலாஜி நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு மாநிலத் தலைவர் எம்.டி. வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளரும், 6-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.ஜி. சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், உறுப்பினர் அடையாள அட்டைகள் புதுப்பித்தல், புதிய தொழிலாளர்களை சங்கத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து, புதியதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவியாக இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.










Leave a Reply