பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஊரக பகுதிகளில் உள்ள 471 அரசுப் பள்ளிகளில் பயிலும் 22,469 மாணவர்களும், நகர்ப்புற பகுதிகளில் உள்ள 6 அரசுப் பள்ளிகளில் பயிலும் 295 மாணவர்களும், ஊரகப் பகுதிகளில் உள்ள 37 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 2,776 மாணவர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 5 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 636 மாணவர்களும் என மொத்தம் 519 பள்ளிகளைச் சேர்ந்த 26,176 மாணவ, மாணவியர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய்கிழமை கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி காய்கறி சாம்பார் ஆகிய உணவுகள் காலையில் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றையதினம் குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் காய்கறிகள், உணவுப்பொருட்களின் தரம், உணவுப்பொருட்களின் இருப்பு, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.










Leave a Reply