சென்னையில்மகளிருக்கானபிரத்யேகஓவிய கண்காட்சி!


ஜிஆர் ஆர்ட்ஸ் சென்டர் நிறுவனர் காயத்ரி ராஜா ஒருங்கிணைப்பில், 16-வது மகளிர் ஓவியக் கண்காட்சி – ஆமர் ஸேட்ஸ் ஆஃப் ஸோல் கடந்த ஜூலை 4 மற்றும் 5, ஆகிய தேதிகளில் ஆர்ட் ஸ்பேஸ் – கல்பா ட்ரூமா, கோபாலபுரம், சென்னை வளாகத்தில், காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற்றது.

16 ஆண்டுகளாக மகளிர் கலைஞர்களுக்கு தனித்துவமான களத்தை உருவாக்கி வரும் ஜிஆர் ஆர்ட்ஸ் சென்டர், இந்த ஆண்டும் 45 மகளிர் கலைஞர்களின் படைப்புகளை ஒரே மேடையில் காட்சிப்படுத்தியது.

“ஆமர் ஸேட்ஸ் ஆஃப் ஸோல் “, என்ற கருப்பொருளில் அன்பு, உணர்வு மற்றும் ஆன்மாவின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் ஓவியங்கள் இடம்பெற்றன.

கண்காட்சியை திறந்து வைத்து முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ருதி சல்லானி (கலைஞர் & ஃபீத்தா பை ஷல்லானி நிறுவன இயக்குநர்), மணிமொழியன் ராமதுரை (கலை இயக்குநர்), அம்பாசிடர் டாக்டர் வி. கே. வெங்கடேசன் (திரைப்பட தயாரிப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர்.