சென்னையில் நம்ம மேட்டுப்பாளையம் சிஐடியுரத்ததான தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவு பரிசை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் வழங்கினார்!

​சென்னையில் இன்று
தமிழகத்தில் ரத்த பரிமாற்று குழுமத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதள பக்கத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இத்துடன் தமிழகத்தில் ரத்ததானம் வழங்கி வரும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், நினைவுக் பரிசுகளையும் அவர் வழங்கினார்.
​இவ்விழாவில், ‘நம்ம மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த ரத்ததானம் தன்னார்வ குழுவினர்’ செய்த தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதேபோல், சமூகப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ‘நம்ம மேட்டுப்பாளையம் மற்றும் சி.ஐ.டி.யூ (CITU) மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க’ நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
​இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சரிடமும் மருத்துவத்துறை உயரதிகாரியிடமும் நம்ம மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யூ பொது தொழிலாளர் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, கூடுதல் நவீன மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.
​மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அருண் ராஜ், உடனடியாக அங்கு குழுமியிருந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். மேலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து, அவற்றை உடனடியாக சரி செய்து தருவதாக சி.ஐ.டி.யூ தோழர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார். இக்கோரிக்கைகளுக்கு அமைச்சரிடம் வழங்குவதற்கு முழு உறுதுணையாக இருந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அவர்களுக்கு சி.ஐ.டி.யூ தோழர்கள் பொதுமக்களின் சார்பில் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சானவாஸ். முகமது அலி ஜின்னா. ஹபிபுல்லா. அப்துல் ரகுமான். லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்