“குடியாத்தம் RDO-வின் கையெழுத்தை போலியாக போட்ட இளநிலை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலகம் அமைந்துள்ளது. இது குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு வட்டங்களை உள்ளடக்கிய வருவாய் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகச் செயல்படுகிறது.

குடியாத்தம் உட்கோட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக சுப்புலக்ஷ்மி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் தலைமையிலான ஜமாபந்தி நிகழ்ச்சி நிரல், நடைபெற கடந்த 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கே.வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம் உட்கோட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலக்ஷ்மி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வடுகன்தாங்கல், கே.வி குப்பம் ஆகிய இரு பிர்கா வருவாய் அலுவலகங்களுக்கு உள்ளடங்கிய அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த நிர்வாக அலுவலர்கள் தங்களுடைய அலுவலகத்தில் உள்ள கணக்குப் பதிவேடுகளை கொண்டு வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் அனைத்தும் சமர்ப்பித்து, ஆவணங்களும் மற்றும் இதர வகைகளும் சரி பார்க்கப்பட்டு தாசில்தார் மற்றும் உட்கோட்டம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் முறையாக ஆய்வு நடத்தி கோப்புகளிலும், நலத்திட்ட சான்றிதழ்களிலும் கையொப்பமிட்டு வழங்குவர். இந்த நிகழ்ச்சியில் அந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் ஜமாபந்தி தலைமை அலுவலரிடம் மனுக்களை வழங்குவார்கள். பின்னர் மனுக்கள் மீதான உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உத்தரவிடுவார்கள்.

மேலும் அந்நிகழ்ச்சியின் நல திட்டங்களை கே.வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம் உட்கோட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் ஜமாபந்தியில், கணக்குகளை கொண்டு குடியாத்தம் இறுதியில் வழங்குவர். வட்டாட்சியர் குடியாத்தம் கோட்டாட்சியர் அவர்கள் தொடங்கிய கிராம சரிபார்த்துக் இருந்தபோது, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த கோப்புகளில் இல்லாத ஒருவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியது தெரிய வந்தது.

இதனையெடுத்து தீவிர விசாரணையில், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணி புரிந்து வரும் பெரும்பாடியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் சம்பந்தப்பட்ட நபருக்கு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமியின் கையெழுத்திடுவதைப் போலவே கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உத்தரவு ஆணை அனுப்பியுள்ளார். இதனையெடுத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகமும் இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனையெடுத்து இளங்கோவிடம் மேலதிகாரிகள் விசாரணை செய்ததில், போலியாக கோட்டாட்சியரின் கையெழுத் திட்டத்தை ஒப்புக்கொண்டார். இது சம்பந்தமான தகவல்கள் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லவே வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் லீலா, ஐஏஎஸ்., போலியாக கையொப்பமிட்டு வட்டாட்சியருக்கு உத்தரவு ஆணை வழங்கிய இளங்கோவை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.