எஸ்.பி.பெயரை வைத்து பவர் காட்டி பொதுமக்களை அலைக்கழிக்கும் தனிப்பிரிவு எஸ்.ஐ – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட எஸ்.பி.சிபின்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு எஸ்.ஐ.ஆக உள்ளவர் அருண் ராஜ்குமார். இவர் எஸ்.பி.யின் பெயரை வைத்து மாவட்ட காவல் நிர்வாகத்தில் தனி பவர் செலுத்தி வருகிறார். நாள்தோறும் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என யார் எஸ்.பி.ஐ நேரில் சந்திக்க வேண்டும் என இவர்தான் முடிவு செய்கிறாராம். தனது முடிவே இறுதி முடிவு என தனி பாதை அமைத்து செயல்படும் இவர் புகார் அளிக்க வரும் பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார். தனது முடிவு இறுதி முடிவு என தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் இவர், காவல்துறையில் பணியாற்றும் போலீசாரிடம் நிர்வாக ரீதியாக பல இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். எஸ்.பி.யின் உத்தரவு என்ற வார்த்தையை வைத்து காவல்துறையில் பணியாற்றும் பிற அதிகாரிகளை மிரட்டி வருவதால் பலர் கலக்கத்தில் உள்ளனர். இதனை முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் புலம்பி வருகின்றனர். தனி அதிகாரம் செலுத்தி மாவட்ட காவல் நிர்வாகம் மீது களங்கம் ஏற்படுத்தும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என பலர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.