‘படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கையே செழிக்கும்’ :கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை !செய்யாறு, ஜூன் 21 -செய்யாறு அருகே முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி மாணவ – மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டதுஅசனமாபேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் தில்லை கார்த்தி. இவர் திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்டத்தின், மாவட்ட அமைப்பாளராக பொறுப்பும் வகித்து வருகிறார். இங்கு வடமனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் இயங்கி வருகிறது.இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு – பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 52 மாணவ – மாணவிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 52 மாணவ – மாணவிகளுக்கு கல்வி விருதாக ‘கேடயம் – பண முடிப்பு’ ஆகியவற்றை வழங்கி அவர் பேசியதாவது; ‘பள்ளி பருவம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை செழிக்கும். நீங்கள் கடந்தாண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் உங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.இதற்காகத்தான் உங்களுக்கான பாராட்டு விழாவை மாவட்ட அமைப்பாளர் தில்லை கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். அவரையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். கிராமப்புறங்களைச் சேர்ந்த அனைவரும் நன்கு படித்து விட்டால் நாடு முன்னேற்றப் பாதைக்கு சென்றுவிடும். இவ்வாறு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வி.ரஞ்சித்குமார், செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் என, பலரும் கலந்து கொண்டனர்.
Leave a Reply