நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவ கழிவு நீரால் தொற்றுநோய் பீதி.. விவசாய நிலங்கள் பாதிப்பு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் அலறும் பொது மக்கள்! கண்டு கொள்வாரா தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.?நாகப்பட்டினம், ஜூன் 21-நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 113 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்தக் கல்லூரியை அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டில் திமுக ஆட்சியில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் திறந்து வைத்தார். 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் செயல்படும் இந்தக் கல்லூரியில், முக்கியமான பதவிகள் உட்பட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதனால், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய ஊழியர்கள் இல்லாததால், கல்லூரி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 2021-ல் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் திறந்து வைத்தார். இந்த மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கும் இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது போதிய ஊழியர்கள் இல்லாமல் தவிக்கிறது.254.8 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. இதற்காக மொத்தம் 366.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கல்லூரியில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. சுமார் 600 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால் கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த குட்டையில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்:இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர், மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக மருத்துவ கல்லூரிக்குள் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ கல்லூரி தொடங்கியதிலிருந்தே இது செயல்படாமல் உள்ளதுமருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுநீர் கிராமத்திற்குள் சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்கள் மற்றும் விவசாய நிலத்திற்குள் போய் சேர்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரியின் அவல நிலையை மாற்ற உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.