தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் பிரிவு 6(1) ன் கீழ் சில இனம்களுக்கு தகவல் கொடுக்கும் படி 1/1/2026 ம் தேதி சில இனம்களுக்கு, சூலூர் சார் பதிவாளர் அலுவலக பொது தகவல் அலுவலருக்கு





. தகவல் கேட்டு, கடமைக்கு என்று ஒரு தகவலை கொடுத்துள்ளார். சிடி அனுப்பாமலே சிடி அனுப்பப்பட்டது என்று ஒரு தகவல் கொடுத்தார். அதை பத்திரிக்கை செய்தியில் வெளியிட்ட பின்பு, மீண்டும் தற்போது அலுவலக கடித எண் –131/2026 நாள் —17/4/2026 ம் தேதியிட்ட கடிதங்களின் இணைப்பில் 1/10/2025 to 15/12/2025 ம் தேதி வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய குறுந்தகடை பதிவேடுகளின் பக்க நகல்களுடன் இணைத்துள்ளதாக ஒரு காலி சிடியை ஒரு அட்டை கவரில் 1/10/2025 to 15/12/2025 என்று தேதி போட்டு காலி சீடியை அனுப்பியுள்ளார். மேலும் தற்போது எந்த கம்ப்யூட்டரிலும் சிடி போட்டு பார்க்க இயலாது என்ற காரணத்தினால் அவர் காலி சீடியை அனுப்பியுள்ளார். மேலும் நாங்களும் ஒரு மாத காலமாக பல பகுதிகளில் அலைந்து, இறுதியில் ஒரு போட்டோ ஸ்டுடியோ கடையில், அந்த சீடியை போட்டு பார்த்தால் அந்த சீடி முழுக்க காலி சிடியாக உள்ளது . இது மனுதாரரை நம்பிக்கை மோசடி செய்யும் செயலை, சூலூர் பொது தகவல் அலுவலர் செய்துள்ளார். மேலும் மனுதாரரை திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கோடு செயல்பட்டுள்ளார். ஆதலால் மேல்முறையீட்டு அலுவலர் இதுபோன்று உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை,மற்றும் காலி சீடிகளை அனுப்பி வைத்து, ஏமாற்றும் பொது தகவல் அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தும், மனுதாரரை ஏமாற்றிய குற்றத்திற்கும்,பொய்யான தகவலை கொடுத்த குற்றத்திற்கும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் நான் கோரிய உண்மை தகவல்களை, மேல்முறையீட்டு அலுவலர் பெற்று தர வேண்டும் மேலும் அரசு நிர்வாகத்தில் பணி புரிந்து கொண்டு குற்ற செயலில் ஈடுபட்ட பொதுத் தகவல் அலுவலர் மீது நீதிமன்ற ம் மூலம் நடவடிக்கை எடுக்க உரிய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பொதுத் தகவலை கொடுக்காமல் ஏமாற்றுவதும், மறைப்பதும் சட்டப்படி குற்றம்.
மேலும்
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன்படி தகவல்கள் தெளிவாகவும் ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். பொதுவான விளக்கக் குறிப்புகள் ஏற்க்கக்கூடியதல்ல. மனுதாரருக்கு தனித்தனியாக ஒவ்வொரு இனத்திற்கும் பொருத்தமான தகவல்கள் அளிக்க பொதுத்தகவல் அலுவலர் பணிக்கப்படுகிறார்.










Leave a Reply