புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் அணைக்கட்டு அதிமுக எம்.எல்.ஏ., த.வேலழகன் சுவாமி தரிசனம்!வேலூர், மே 16-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் நடைபெற்ற புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு பெருவிழாவில், அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான த.வேலழகன் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் சார்பில்‌ எம்.எல்.ஏ., த.வேலழகனுக்கு பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து சிறப்பு கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் ஜெ.கே.என். பழனி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் காடை ஜி.பி.மூர்த்தி, பேரணாம்பட்டு நகர செயலாளர் எல்.சினிவாசன், குடியாத்தம் கைத்தறி காவலன் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிரசு திருவிழாவை சிறப்பித்தனர்.