கதர் சட்டைகளை கசக்கிப் பிழியும் மாவட்டம்!திருப்பத்தூர், ஏப். 22-திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ. விஜய் இளஞ்செழியன் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் கதர் சட்டை நிர்வாகிகளுக்கு குறைத்து வழங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய் இளஞ்செழியன் பதவியேற்ற நாட்களில் இருந்து நிர்வாகிகளை மதிக்காதது, தன்னிச்சையாக செயல்படுவது என்று பல்வேறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு கட்சித் தொண்டர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் குழுவினரை மதிக்காமல் தன்னிச்சையாக விஜய் இளஞ்செழியன் செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த கிருஷ்ண சந்தர் என்பவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, க்ரிஷ் சோடங்கர், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும், திமுக அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கும் பல்வேறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.”நகர ஒன்றிய தலைவர்களுக்கு 50 ஆயிரம் வழங்க சொல்லி கொடுத்தால் விஜய் இளஞ்செழியன் வழங்கியதோ பத்தாயிரம் ரூபாய் . முக்கிய நிர்வாகிகளுக்கு 25 ஆயிரம் வழங்க சொல்லிக் கொடுத்தால் வழங்கியதோ ஐந்தாயிரம் ரூபாய். கிளை நிர்வாகிகளுக்கு 5 ஆயிரம் வழங்கிய சொல்லிக் கொடுத்தால் வழங்கியது ஆயிரம் ரூபாய் ” என்று கதர் சட்டைகள் குமுறுகின்றனர்.

முதல்வர், துணை முதல்வர் வருகையின் போது காங்கிரஸ் சார்பில் ஆயிரம் பேரை அழைத்து வருமாறு அழைக்கப்பட்ட பணத்திலேயே சுருட்டி பாக்கெட்டில் போட்டுவிட்டு, 100 பேரையே கூட்டிச்சென்று திமுகவினருக்கு அல்வா கொடுத்தவர் விஜய் இளஞ்செழியன் என்று அவர்களின் தனித் திறமையை சொல்லிப் பெருமைப்படுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

இவ்வளவு ஏன் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது திருப்பத்தூரில் மாவட்ட தொண்டர்கள் தங்களை அழைத்துச் செல்லுமாறு மாவட்ட தலைவரிடம் கேட்டபோது, உள்ளூரிலே கூட்டணிக்கு வேலையை பாருங்கள் என்று பெருந்தன்மையோடு கூறி இருக்கிறார் என்று விஜய் இளஞ் செழியன் என்று அவருடையஎக்ஸ்ட்ரா மில்லியன் பவரை சொல்கின்றனர் கதர் சட்டைகள்.
விஜய் இளஞ்செழியன் தந்தை முன்னாள் எம்பி ஏ. ஜெயமோகன் கூட்டணிக் கட்சியை எதிர்பார்க்காமல் தன் கை காசை போட்டு கட்சியை வளர்த்தவர் என்றும் நாடி வந்த தொண்டர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் அவர் என்று கூறுகின்றனர் கதர் சட்டைகள்.
மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ்நாட்டில் இன்றளவுக்கு மதிக்கப்படும் காங்கிரஸ் முன்னணி தலைவர் ஜெயமோகனின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படும் விஜய் இளஞ்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜன்பத் ரோடுக்கும், அக்பர் ரோடுக்கும், சத்தியமூர்த்தி பவனுக்கும் புகார் மனுக்கள் பறக்கின்றன.