கோவையில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு கோவை காட்டூரில் உள்ள ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
எச்எம்எஸ் மாநில செயல் தலைவர் ராஜாமணி ஆகியோர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நசுக்கி வரும் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அதன் பிடியில் சிக்கி உள்ள அதிமுக கூட்டணியை வீழ்த்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்ய அனைத்து தொழிற்சங்க கூட்டணிக்கு குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் ஒன்றிய பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவை ஒரு ஒற்றை பரிமாண, இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சியில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து அதிகாரங்களையும் தில்லியில் குவிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி. பண்பாடு மற்றும் மொழி மீது ஒன்றிய அரசு கொண்டுள்ள வண்ணம் ஆபத்தானது என தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி வரியை தமிழகத்திற்கு உரிய முறையில் பகிர்ந்து அளிக்காமல், இயற்கை பேரிடர் மற்றும் கல்விக்கான நிதியையும் வழங்காமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு. தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கொண்டு வந்துள்ளனர். இதுபோன்று மக்கள் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை தோற்கடித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற செய்வது எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது உடன் ஏஐடியுசி சார்பில் தங்கவேல்,ஐஎன்டியுசி சார்பில் பாசமலர் சண்முகம், எம்எல்எப் ஷாஜகான், எல்பிஎஃப் துரை எஸ்யுடியு ஷாஜகான் மற்றும் ஏஐசிசிடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.










Leave a Reply