வேலூர், ஏப். 10-
குடியாத்தம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் பரிதா புருஷோத்தமன். இவர் தினசரி குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பேரணாம்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர் அங்கிருந்த ஒரு தேநீர் கடையில் தேநீர் போட்டு கொடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்குகளை சேகரித்தார். அத்துடன் அவருடன் வாக்கு சேகரிக்க வந்திருந்த அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தேநீர் போட்டு கொடுத்து நூதன முறையில் வாக்குகளை சேகரித்தார் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன். இவரது நூதன வாக்கு சேகரிப்பை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் ஒரு சலசலப்பும், ஒரு பரபரப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வேட்பாளரே தனது கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்து ஓட்டு சேகரித்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply