அணைக்கட்டு தொகுதி சோழவரத்தில் திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 10-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆசி பெற்ற, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், சோழவரம் கிராமத்தில் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், சோழவரம் ஜேபி (எ) ஜெயப்பிரகாஷ், திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
Leave a Reply