வேலூர் விண்ணரசி மாதா தேவாலயத்தில் தவெக வேட்பாளர் வினோத் கண்ணன் பிரசாரம்!

வேலூர், ஏப். 9-
வேலூர் தொகுதி தவெக வேட்பாளர் வினோத் கண்ணன், 8ம் தேதி காலை விண்ணரசி மாதா தேவாலயத்திற்கு சென்று பாதிரியாரிடம் ஆசி பெற்று வாக்கு சேகரித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வினோத் கண்ணன் போட்டியிடுகிறார். பட்டதாரியான இவர் சமூக அக்கறையும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வேலூர் நகரம் முழுவதும் தினமும் வாக்கு சேகரித்து வருகிறார்.
8ம் தேதி காலை வேலூர் விண்ணரசி மாதா தேவாலயத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்ற வேட்பாளர் வினோத் கண்ணன் அங்கு கத்தோலிக்க பாதிரியார் ராய் லாசரை  சந்தித்து ஆசி பெற்றார். வேலூர் மக்களுக்கு சேவை செய்ய தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கிறிஸ்தவ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து வினோத் கண்ணனுக்கு பாதிரியார் ராய் லாசர் ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விண்ணரசி மாதா தேவாலய பாதிரியார்கள் பிரபு, ஜோசப், அந்தோனி ராஜ், ஞானமணி, ஜெபமணி, தமிழக வெற்றிக் கழக பகுதி செயலாளர் நிதின், ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக வேட்பாளர் வினோத் கண்ணன் வேலூர் மக்கான் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.