ஈஸ்டர் திருநாளில் சி. எஸ். ஐ. தேவாலயத்தில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 6-துன்பங்கள் போக்கி துணைநிற்க உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை போற்றும் இனிய நாளில் காட்பாடியில் உள்ள சி. எஸ். ஐ. தேவாலயத்தில் மக்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் திமுக காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன். அப்போது தேவாலயத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் தனக்கு வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களையும் அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்து மகிழ்ந்தார் திமுக வேட்பாளர் துரைமுருகன். திமுக வேட்பாளர் துரைமுருகனுடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் நகரில் 4 வார்டுகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பரிதா!வேலூர், ஏப். 6-குடியாத்தம் நகரம் ,வார்டு 20,21,23,35ல் உள்ள வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து தனது வெற்றிக்கு உழைக்குமாறு குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். அவர் மேலும் கூறுகையில் ஒரு வாக்காளர் விடாமல் ஒரு வீடு விடாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து தொண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் அவர் அன்புடன் கேட்டுக் கொண்டார்.குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர்ஜி.பரிதா புருஷோத்தமனுடன்,அதிமுக குடியாத்தம் நகர செயலாளர்ஜே. கே. என். பழனி மற்றும் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்சதீஷ் சங்கர் ஆகியோர் இருந்தனர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களையும் நேரில் சந்தித்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் பரிதா.