வேலூர், கூட்டுறவு கற்பகம் பல்பொருள் அங்காடியில், ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்!

வேலூர், அக். 21-
வேலூர் ஆபீஸர்ஸ் லைன், கற்பகம் கூட்டுறவு பல்பொருள் அங்காடியில், குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ சன்னரக அரிசி கிலோ ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை, வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் து.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருக்குண ஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.