வேலூர், அக். 19-
வேலூர் பிஷப் டேவிட் நகரில் வசிப்பவர் அமுல்ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் உள்ளார். இவரால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக இவர் அந்தோணியார் கோயில் ஒன்றை நிறுவி அதை நிர்வகித்து வருகிறார். இந்த அந்தோணியார் கோயிலுக்கும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் அடிக்கடி மத மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏற்பட காரணமாக உள்ளார். இது ஒரு புறமிருக்க இந்த நபர் பலரை மிரட்டி பணம் பறித்து கொண்டு வந்து ரூபாய் 2 கோடி அளவில் பிரமாண்டமாக வீடு கட்டி வைத்துள்ளார் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. இவருக்கு எங்கிருந்து அவ்வளவு பணம் வந்தது? என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் கண்காணித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. வேலூர் தெற்கு போலீசாரும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவர் அன்றாடம் காலையில் அட்டைப்பெட்டியில் மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களான கஞ்சா, அபின், குட்கா இன்னும் பல போதை பொருட்களை கடத்திக் கொண்டு தாயாக சென்று பல்வேறு இடங்களில் விநியோகம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது .குறிப்பாக இவர் சில்லரை விற்பனையில் அதிகம் ஈடுபடுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதால் இவரை பார்த்து அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர். இவர் ஏதாவது செய்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் இவர் மீது புகார் தர சிலர் அஞ்சுகின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் அந்த பகுதியில் பொதுமக்களை உருட்டி, மிரட்டி வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர்களை வைத்துக்கொண்டு இவர் தனது வியாபாரத்தை நுணுக்கமாக பல கோடி வாரி குவித்துள்ளார். இவர் தொழிலை ரகசியமாக நடத்தி வருகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. போலீசாருக்கு இவர் மாமூல் தருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்ணில் மண்ணை தூவி இவர் தனது தொழிலை மட்டும் அமோகமாக நடித்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அமுல்ராஜ் இந்தப் பகுதியில் உள்ள ஒரு களங்கம் என்று சொல்லலாம். இவர் இந்த பகுதியில் டான் போல வலம் வந்து கொண்டுள்ளார்.அந்த அளவிற்கு திருமாவளவனின் பெயரை இவர் நாரடித்து வருகிறார் என்றே சொல்லலாம். இவரை கண்டும் காணாமல் இருப்பதற்கு இவர் பல்வேறு வாய் முட்டுகளை இவருக்கு மேலுள்ள விசிக பொறுப்பாளர்களுக்கு செய்து கொடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாவட்ட செயலாளரின் கை பொறுப்பை வாங்கியிருக்கும் என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாவட்ட செயலாளரை கையில் வைத்துக் கொண்டு இவர் விளையாடுவதாக கூறுகின்றனர் விடுதலை சிறுத்தைகளில் உள்ள ஒரு தரப்பினர். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு இந்த தகவல் தெரியுமா ?தெரியாதா? என்று தெரியவில்லை. இவர் போதை பொருட்கள் விற்பதுடன் நிறுத்தவில்லை குறிப்பாக இவர் இந்த வீட்டில் பயங்கர ஆயுதங்களையும் மறைத்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. மசாஜ் செய்ய அனுமதி பெற்று அழகு நிலையம் நடத்தாமல் விபச்சாரம் நடத்தி வருகிறார். இதனால் பகிரங்கமாக வந்து இவர் மீது புகார் மனு கொடுப்பதற்கு, சொல்வதற்கு சிலர் அச்சப்படுகின்றனர். குறிப்பாக இவர் போதை பொருட்களை மட்டும் இன்றி விபச்சார அழகிகளையும் வைத்து தனியாக தொழில் நடத்துவதாக கூறப்படுகிறது. சித்தேரி பகுதியில் தனியாக வீடு எடுத்து வைத்துக்கொண்டு அதில் இவரும் இவரது மைத்துனர் ராஜியும் இணைந்து விபச்சார தொழிலை விரிவுபடுத்தி நடத்தி வருகின்றனர். இவர்களுடன் விஐபிக்கள் கூட இணைப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கடை மட்ட காவலர்கள் வரை இவர்களது வலையில் விழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை உரிய முறையில் விசாரித்தால் அனைத்தும் வெளிவரும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள். இவர் யார் கேட்டாலும் மிரட்டி, உருட்டி அவர்களை எந்த பணியும் செய்யவிடாமல் தடுத்து இவரது பணியை மட்டும் செய்து கொண்டு இவரது பணிக்கு எந்தவித இடையூறும் வராமல் இவரது தொழிலை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .கடந்த காலங்களில் இவர் செய்த அட்டூழியங்களை தொடர்ந்து சுட்டிக் காட்டுவது நமது தலையாய கடமையாகும். அப்படி இருக்கையில் இந்த தொழிலில் மட்டும் இவரை கைது செய்யாமல் காவல் துறை ஒதுங்கி கொண்டு அமைதி காத்தால் இவரை ஆண்டவனாலும் தடுத்து நிறுத்த முடியாது .குறிப்பாக இவர் பல்வேறு பாலியல் நோய் தொற்று உள்ளவர்களிடமும் தொடர்பில் உள்ளார் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இவரது விபச்சார தொழிலில் தலையிட்டு எய்ட்ஸ் நோய் பரப்புவதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கோரிக்கையாக கேட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை விசாரணைக்கோ அல்லது சிறையில் அடைக்கவோ காவல்துறை எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பது சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த அமுல்ராஜூக்கு காப்பு கட்டுவாரா? அல்லது தமிழக முதல்வர் விஜய் காப்பு கட்டுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோன்று பிஷப் டேவிட் நகரில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பயங்கர ஆயுதங்களை கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply