அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டி மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

இன்று மாலை ஆறு மணியளவில்(15.10.2026 வியாழக்கிழமை) நரசிம்ம நாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கடும் மழைக்கு இடையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டி மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் உஷா அவர்கள் தலைமை ஏற்க மாநில பொதுச்செயலாளர் தோழர் கே.ராதிகா அவர்கள் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டத்தலைவர் தோழர் அமுதா மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ராஜலட்சுமி மற்றும் ஒன்றிய செயலாளர் புஷ்பலதா ஒன்றியத்தலைவர் பிரேமலதா மற்றும் மாதர் சங்க மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளான மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.ஜெ.உஷா.அ.ராதிகா.எம்.அமுதா.எஸ்.ராஜலட்சுமி.என்.புஷ்பலதா.