கெங்கையம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி!

வேலூர்,அக்.19-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் கெங்கையம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு கண்காட்சி காண்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொலுவை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்த கொலு கண்காட்சியை காண வரும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் தினமும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏழாம் நாளில் கொலு கண்காட்சியில் பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.