சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானம்!வேலூர், மே 23-திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கும் தானமாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா திரையரங்குகளில் டிக்கெட் விலையை ரூ.250 ஆக உயர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை மனு!வேலூர்,மே 23-தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டண விலை உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 190, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் ரூபாய் 150 என தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் பொழுதுபோக்கு வரியையும் நீக்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சமர்ப்பித்துள்ளனர். இதனால் திரையரங்குகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமா? அல்லது பழைய கட்டணமே தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக சார்பில் கள ஆய்வு!வேலூர், மே 22-நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் களப்பணிகளின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வேலூர் தெற்கு மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு தெற்கு, ,வடக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகளுடனான கள ஆய்வு கூட்டம் வேலூரில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் மற்றும் கழக சட்டத்துறை இணை செயலாளர் I.பரந்தாமன் தலைமையிலும், வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ஒருங்கிணைப்பிலும் வேலூரில் நடைபெற்றது.

21.05.2026வியாளன் மாலை பெரியநாயக்கன்பாளையம் ஜடல்நாயுடுவீதி பகுதியில் பத்தாம்வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அவர்களின் அடுத்த முயற்சிக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவுன்சிலர் தோழர் நவ. சிவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இனிதாக்க மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர்கள் தோழர்கள் ஆர். கருப்புசாமி. எஸ். இன்பவள்ளி. கே. வெங்கிடசாமி மற்றும் திரளானோர் பங்குபெற்றனர். இளைய தலைமுறையை பாராட்டி மகிழ்வதுடன் அவர்களின் எதிர்கால கடமைகளை நினைவூட்டும் விதமாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள்: தாய் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!வேலூர், மே 21-மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி, தாய்த் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மரியாதையுடனும், அமைதியான சூழலிலும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி ராணுவ வீரர் ரஞ்சித் குமார் தலைமையில், அவரது தோழர்களுடன் இணைந்து சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.மேலும், இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் நினைவுகளைப் போற்றினர்.

பொன்னை அருகே வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட 2 லாரிகள், 1 ஜேசிபி பறிமுதல்: ஓட்டுநர்கள் தப்பியோட்டம்!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம்,,பொன்னை அடுத்த சீனிவாசபுரம் ஏரியில் வண்டல் மண் கொள்ளையர்கள் லாரி மற்றும் ஜேசிபி கொண்டு வண்டல் மண்ணை கொள்ளையடிப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் வரப்பெற்றது இதை எடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உத்தரவின் பேரில் உன்னை போலீசார் சீனிவாசபுரம் ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்பிரிவு போலீசார் மற்றும் கிராம இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்தவுடன் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ஓட்டுநர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மர்ம நபர்கள் விட்டுச் சென்றவாகனங்களை பறிமுதல் செய்துபோலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த மேனல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு !செய்யாறு, மே 21 -செய்யாறு அடுத்த மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடை கோடியில் அமைந்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 62 மாணவ – மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 60 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதமாகும். தமிழ்ச்செல்வன் என்ற மாணவன் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்துமதி என்ற மாணவி 469 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், பவனிஷா என்ற மாணவி 456 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்.தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் தயாளன் இனிப்பு வழங்கி பாராட்டினார். இதேபோல் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், எஸ்.எம்.சி., தலைவர், உறுப்பினர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளை பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர் தயாளனுக்கும் – சக ஆசிரியர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.