பொன்னை அருகே தமிழக ஏரியில் ஆந்திர கழிவுநீரை வெளியேற்ற முயற்சி!

வேலூர், அக். 9-
ராட்சத குழாய்கள் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை அருகே தமிழக எல்லைக்குட்பட்ட ஏரியில் ஆந்திர மாநில கழிவுநீரை வெளியேற்றுவதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் சாலை மறியலில் கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் பொன்னை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.