உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தவும், தெருவுக்கு தெருவில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, பிரச்சனை, மின்விளக்கு பிரச்சனை உள்ளிட்ட பணிகளில் மக்களுக்காக சேவையாற்றிட அறிவுறுத்தல்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம், கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள அண்ணாமலையார் ரெசிடென்சி கூட்ட அரங்கில், வீ த லீடர்ஸ் – நாங்கள் தலைவர்கள், மதிப்புமிகு அண்ணாமலை இயக்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள மகளிர் மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வீ த லீடர்ஸ் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்டத்தின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வீ த லீடர்ஸ் தலைமை நிர்வாகிகள் சங்கர், கமலக்கண்ணன், சூர்யா, ரவி, ரஜினி ராஜ்குமார், எஸ். சந்தானம், கிருஷ்ணன், ஆஷா, கவிதா, இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி ஆலோசனைக் கூட்டம் தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள மாநில மகளிர் அணி மாநாடு குறித்து நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மேலும், மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்வாகிகள் கிருஷ்ணகிரி செல்வது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதற்குத் தேவையான மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சிறப்புரையாற்றினர். இதில் அவர் பேசியதாவது:உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தவும், தெருவுக்கு தெருவில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, பிரச்சனை, மின்விளக்கு பிரச்சனை உள்ளிட்ட பணிகளில் மக்களுக்காக சேவையாற்றிட அறிவுறுத்தி பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வீ த லீடர்ஸ் இயக்கத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply