ஓடையை விற்றதால் வீணாகும் மழை நீர்

கடந்த இரண்டு நாட்களாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழை வீணாகி வருகிறது.
காரணம் ஓடைப்பகுதிகளை எல்லாம் பட்டா போட்டு உள்ளாட்சி நிர்வாகத்தினர் விற்று விட்டனர்.
ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களை அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன்,ஊராட்சி அலுவலர்கள் விற்று அந்த தொகையை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டனர்.
இதனால் மழை பெய்து வீணாகும் தண்ணீரைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.மேலும் மழை நீரே கண்ணீர் வடிக்கும் அவலம்.
இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?