வேலூர், அக். 17-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கிறிஸ்டியான்பேட்டையில் மாவட்ட கலால் பிரிவு காவல் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்களை நிறுத்தி போதை பொருட்கள் ஏதாவது கடத்தி வரப்படுகிறதா? என்று சோதனை செய்ய வேண்டும். அந்த நோக்கத்தில் நிறுவப்பட்டதுதான் இந்த சோதனை சாவடி. ஆனால் நிறுவப்பட்ட சோதனை சாவடியை முறையான பணிக்கு பயன்படுத்தாமல் வசூல் வேட்டை நடத்தும் இடமாக மாற்றி விட்டனர் இந்த கலால் பிரிவு போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக இங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இரு சிசிடிவி கேமராக்கள் இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிசிடிவி கேமராக்களும் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்துவது போல் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பணிக்கு வரும் போலீசார் தாங்கள் மட்டும் பணியாற்றாமல் வேறு சில வெளி நபர்களை அழைத்து வந்து துணைக்கு வைத்துக் கொண்டு வசூல் வேட்டையில் தாராளமாக தங்கள் விருப்பப்படி வசூல் செய்து கொள்கின்றனர். இதனை என்னவென்று விசாரித்து பார்த்தால் அவர்கள் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பதிலை தெரிவிக்கின்றனர். போலீஸ் நண்பர்கள் குழுவிற்கும் கலால் பிரிவு சோதனை நடத்தும் இடத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. வசூல் வேட்டை நடத்துவதற்கு ஒரு ஆள் தேவைப்படுகிறார். அதற்காக இதுபோன்ற வெளிநபர்களை நியமித்துக் கொண்டு இந்த கலால் பிரிவு போலீசார் இந்த சோதனை சாவடியில் 8 மணி நேரம் பணியில் இருக்கும் போது கொட்டமடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை கண்காணித்து கேள்வி கேட்க வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகள் நமக்கு என்ன என்று கண்டும் காணாமல் அமைதி காக்கின்றனர். இதனால் இவர்கள் விருப்பம் போல் நடந்து கொள்கின்றனர். வரும் வண்டிகளை வழிமறித்து நிறுத்தி தடுத்து அந்த வாகன ஓட்டுநரை இறக்கி வாகனத்திற்கு தலா ரூபாய் 100 முதல் அதிகபட்சமாக ரூபாய் 300 வரை கறாராக வசூல் செய்து கொள்கின்றனர் இங்கு பணியில் உள்ள போலீசார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஆனால் அவர்களை நேரில் சென்று ஏன் வாகனங்களை நிறுத்தி வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டால் இல்லை அவர்கள் ரூபாய் 20 தான் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். ரூபாய் 50 கொடுத்துவிட்டு செல்கிறார்கள் என்று கூலாக பதில் சொல்கிறார்கள். அதற்கு கூட ஏன் பணம் தர வேண்டும் என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் எந்தவொரு பதிலும் இல்லை. இது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு சென்றதா? இல்லை கவனத்திற்கு சென்றும் அமைதி காக்கப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. குறிப்பாக இங்கு நடைபெறும் வசூல் வேட்டை ஒரு சிதம்பர ரகசியமாகவே கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர விடை கிடைப்பது எப்போது?.கலால் பிரிவு போலீசார் தங்கள் பணிகளை மட்டும் பார்க்க வேண்டுமே தவிர வேண்டத்தகாத, விரும்பத்தகாத செயல்களை மட்டுமே இங்கு செய்கின்றனர். வாகனங்களை சோதனை செய்யாமல் வாகனங்களை திரும்பி கூட பார்க்காமல் வசூல் வேட்டையை மட்டுமே நடத்துகின்றனர். குறிப்பாக ஒரு வாகனம் வந்தால் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை மட்டும் குறித்துக் கொண்டு அவர்களிடம் வசூல் வேட்டை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதான் இங்கு நடைபெறும் அன்றாட பணி என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் போலும். ஆதலால் இவர்கள் நாளுக்கு நாள் வசூல் வேட்டையில் தீவிரம் காட்டுகின்றனர். தவிர நமக்கு என்ன இன்றைக்கு கிடைத்தது என்பதையே பார்க்கின்றனர். அரசின் பணிக்கும் அரசின் வருவாய்க்கும் எந்தவித வழி வகையும் செய்வது கிடையாது. நமது பாக்கெட் நிரம்பினால் போதும் என்ற ரீதியில் இவர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பாக கடத்தல்காரர்களுக்கு இவர்கள் வழி விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. குறிப்பாக இந்த வழியாகத்தான் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் மற்றும் ஆந்திர மாநில மது வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த வழியாகவே கடத்தப்படுகின்றன. ஆனால் ஏதோ பெயருக்கு ஒன்று இரண்டு வழக்குகளை காண்பித்து விட்டு அதுவும் பணம் தராதவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்கிறார்கள். பணம் தருபவர்கள் ராஜா வீட்டு கண்ணு குட்டி போல ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதற்க்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காப்பு கட்டுவாரா? அல்லது காவல் துறையை கையில் வைத்து கொண்டுள்ள தமிழக முதல்வர் விஜய் காப்பு கட்டுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply