அமைச்சர் விஜய் பாலாஜி குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, வேலூர் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு!

வேலூர், அக்.17-
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை, அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 37 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. வினோத் கண்ணன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ம. சுதாகர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். விஜய் சந்திரன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ். முத்துசித்ரா, ஆர்டிஓ, தாசில்தார், வருவாய் துறையினர், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறை ஆய்வாளர், காவல்துறையினர், பயனாளிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.