வேலூர், அக்.17-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, திருமலைக்கோடி, புகழ்பெற்ற வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில், ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் நவராத்திரி மகா உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 4ம் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீ நாராயணி கலாபீடம் சார்பில், பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் நர்த்தகி நடராஜ் மற்றும் அவரது குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் சிறப்பிடம் பெற்ற பரதநாட்டியக் கலையின் அழகையும், அதன் ஆன்மிகப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, நவராத்திரி மகா உற்சவத்தின் கலை மற்றும் ஆன்மிகச் சிறப்பை உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்வின்போது ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழும இயக்குநர் சுரேஷ்பாபு, பொது மேலாளர் சம்பத்குமார், குழும அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், நடன கலை நிகழ்ச்சி ஆசிரியர்கள், நடன நிகழ்ச்சி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நவராத்திரி உற்சவ விழாவை சிறப்பித்து வருகின்றனர்.











Leave a Reply