அரியலூர் மாவட்டத்தில் 14 அருகாமை மையங்கள் திறப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்காக முதற்கட்டமாக 14 அருகாமை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உடையார்பாளையம் வட்டம் அணைக் குடம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருநாளிணி மையத்தை திறந்து வைத்தார்.
அரியலூர்,ஆண்டிமடம்,ஜெயங்கொண்டம்,செந்துறை,தா.பழூர்,திருமானூர் ஆகிய வட்டாரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் மற்றும் இதர விண்ணப்பங்களை இணையதளம் மூலம் கட்டணம் இன்றி பதிவு செய்யலாம். மேலும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் அளிக்கலாம். ஆகவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.