வேலூர், அக்.14-
வேலூர் சாய்நாதபுரத்தில் வேலூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 மற்றும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், முன்னிலையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்தரின் சரண்யா, மாநகர நல அலுவலர் மருத்துவர் பிரதாப் குமார், வேலூர் வட்டாட்சியர் உதயகுமார், சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply