மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ரத்தத்தின் அவசர அவசியத்தை உணர்ந்து, திமுக மாநில செயற்குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றியச் செயலாளருமான வழக்கறிஞர் அசரப் அலி அவர்கள் இன்று அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உடனடியாக ரத்ததானம் செய்தார்.
அவசர காலகட்டங்களில் ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பது அனைவரின் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது இந்தச் செயல் அமைந்தது. இந்நிகழ்வின் போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நோயாளிகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஷானவாஸ் அவர்கள் உடனிருந்து ஒருங்கிணைத்தார். உரிய நேரத்தில் ரத்ததானம் செய்து உதவிய வழக்கறிஞர் அசரப் அலி அவர்களுக்கு மருத்துவர்களும் நோயாளிகளின் உறவினர்களும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்












Leave a Reply