வேலூரில் ஓம் நமோ நாராயணா பக்த சபையின் 4ம் சனிக்கிழமை, 11-ஆம் ஆண்டு பாதயாத்திரை விழா!

வேலூர், அக்.11-
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம் மந்தவெளியில் ஓம் நமோ நாராயணா பக்த சபை சார்பில் புரட்டாசி மாத 4ம் சனிக்கிழமை ,11-ஆம் ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரையை முன்னிட்டு, ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ பத்மாவதி ,ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சி விஜயகுமார், மோகன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பி. சரவணன், பாலாஜி, விஜயலட்சுமி, வேண்டா, சீனு, சத்தியா, ராஜேஷ் மற்றும் பக்த சபை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருமலை திருப்பதி பாதயாத்திரை புறப்பாடு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர்.