வேலூர், அக்.10-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பாக்ஸ் கிரிக்கெட் (Box Cricket Turf) மைதானத்தை மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் ம.சுதாகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் சேதுராஜன், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply