வேலூர், அக். 9-
வேலூர் மாவட்டம், வேலூர்: உலக அளவில் புகழ்பெற்ற சிஎம்சி வேலூரின் Centre for Stem Cell Research (CSCR) சார்பில் 11வது சர்வதேச செல் மற்றும் மரபணு சிகிச்சை மாநாடு (CGTCON 2026), அக்டோபர் 8 முதல் 10ஆம் தேதி வரை சிஎம்சி வேலூர் பாகாயம் வளாகத்தில் நடைபெறுகிறது. BRIC–Institute for Stem Cell Science and Regenerative Medicine (inStem), பெங்களூரு மற்றும் Christian Medical College (CMC), வேலூர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக செயல்பட்டு வரும் CSCR இந்த மாநாட்டை நடத்துகிறது.
மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 9ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு, சிஎம்சி வேலூர் பாகாயம் வளாகத்தில் உள்ள Scudder Auditorium-ல் நடைபெறுகிறது. இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) முன்னாள் இயக்குநர் பேராசிரியர் பால்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
செல் மற்றும் மரபணு சிகிச்சைத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுடன், பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் குறைந்த செலவிலான மேம்பட்ட சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என இவ்வாறு தெரிவித்தனர்.











Leave a Reply