வேலூர், அக். 9-
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலை, அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் எம்.வாஹித் பாஷா தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேஜ் அணிந்து, கட்சி கொடிகள் மற்றும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் தேவேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பி.பி.சந்திரபிரகாஷ், பி.பி.ஜெயப்பிரகாஷ், நிர்வாகிகள் துளசிராமன், ரகு, கப்பல்மணி, மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.











Leave a Reply