வேலூர், அக். 8-
வேலூர், ஆஃபீஸர்ஸ் லைன் சாலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சி வேலூரில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டு ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சாலை அண்ணா கலையரங்கம் வரை ‘சேவை ஜோதி யாத்திரை’ நடைபெற்றது. யாத்திரையில் பாஜகவினர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி, பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
மேலும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply