அணைக்கட்டு தொகுதி, பீஞ்சமந்தை அரசு பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூர், அக். 8-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்கள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், அவர்களின் கல்வி செயல்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆட்சியருடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.பிரேமலதா, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.